D
மட்டக்களப்பு, கல்லடி பிரதேசத்தில் காட்டு யானைகள் உள்நுழைவதை தடுக்க பொருத்தப்பட்ட சட்டவிரோத மின்கம்பியில் சிக்கிய இளைஞனின் உயிரைக் காப்பாற்ற, தன் உயிரை பணயம் வைத்த அண்ணன் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
கொட்டுகச்சிய நவோத்யா வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் 14 வயதுடைய சுனேத் ஹிமாஷ என்ற மாணவனே தனது இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.
சிறுவனின் சகோதரனும் நண்பரும் இல்லாவிட்டால் இந்நேரம் அவர் உயிரிழந்திருப்பார் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த சிறுவன் தனது வீட்டிற்கு அருகில் கறிவேப்பிலை பறிக்க சென்ற போது மின்கம்பியில் சிக்கியுள்ளார்.
உயர் மின்னழுத்தம் கொண்ட மின்சார கம்பியில் சிறுவன் கையை வைத்துள்ளார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்துக் கொண்டிருப்பதனை அவதானித்த சகோதரன் மற்றும் அவரது நண்பர் தங்கள் உயிரை பற்றி யோசிக்காமல் தம்பியின் காலை பிடித்து இழுத்து காப்பாற்றியுள்ளனர்.