D
மக்களை காப்பதற்காகவே முதன்முறையாக தேசிய மக்கள் சக்தி, அரசாங்கத்தை அமைக்கும் என கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayakke) தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை எவராலும் தடுக்கமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் வெற்றியைத் தடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடைசி நேரத்தில் தந்திரத்தை மேற்கொள்வார் என்ற சந்தேகம் சிலருக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பெரும்பான்மையான அரச ஊழியர்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் என்று அனைவரும் இந்த முறை, தேசிய மக்கள் கட்சிக்கு ஆதரவளிப்பதாகவும், ரணில் விக்ரமசிங்க எந்த தந்திரத்திலும் ஈடுபட முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இதுவரை ஆட்சியாளர்களின் குடும்பங்கள் மற்றும் நண்பர்களைக் கவனிப்பதற்காகவே அரசாங்கங்கள் உருவாக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.