D
சட்டவிரோத இரட்டைக் குடியுரிமைச் சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா (Diana Gamage) கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் டயானா கமகேவை முன்னிலைப்படுத்திய போது மூன்று குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது.
2004 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி முதல் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தவறான தகவல்களை வழங்கி இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டமை மற்றும் சட்டவிரோத இரட்டைக் குடியுரிமையை வைத்திருந்தமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் சட்டமா அதிபர், டயானா கமகேவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
ஏற்கனவே, இந்த குற்றச்சாட்டின் பேரில் டயானாவின், நாடாளுமன்ற பதவி பறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.