Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

யாழில் மனைவி உயிரிழந்த விரக்தியில் கணவனும் விபரீத முடிவு

0 1

யாழில் மனைவி உயிரிழந்த விரத்தியால் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்த்துக்கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று(27.08.2024)இடம்பெற்றுள்ளது.

இதன்போது, புது வீட்டுத்திட்டம், நாவற்குழி, கைதடி பகுதியை சேர்ந்த மனுவல் சூசைமுத்து (வயது 72) என்பவரே இவ்வாறு தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்.

இவரது மனைவி ஒரு வருடத்திற்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில், அவரை பிரிந்த துயரத்தில் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே அவர் நேற்றையதினம்(27) தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக்கொண்டுள்ளார்.

அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.