Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

பிரித்தானியாவில் பரவும் புதிய வகையான வைரஸ்

0 1

பிரித்தானியாவில் கால்நடைகளை பாதிக்கும் புதிய வகையான ‘ப்ளூடங்’ (Bluetongue) என அழைக்கப்படும் வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த வைரஸ் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது அல்ல எனினும், மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

பிரித்தானியாவின் நார்ஃபோல்க் (Norfolk) பகுதியில் உள்ள ஹாட்டிஸ்கோ (Haddiscoe) என்ற இடத்தில் ஒரு ஆடு இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ப்ளூடங் வைரஸ் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால் இதனைத் தடுக்க 20 கிலோமீட்டர் கட்டுப்பாட்டு வட்டாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த வருடத்தின் மே மாதத்தில் புதிய வகை வைரஸ் ஒன்று பரவும் ஆபத்து இருப்பதாக பிரித்தானிய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

தற்போது, நெதர்லாந்து, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ், லக்சம்பர்க், டென்மார்க் போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது.

ப்ளூடங் வைரஸின் அறிகுறிகளாக சிவந்த வீக்கம் கொண்ட நாக்கு, காய்ச்சல் மற்றும் பால் உற்பத்தி குறைவு போன்றவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

பிரித்தானியாவின் துணை முதன்மை கால்நடை மருத்துவர் எலே பிரவுன் (Ele Brown), விவசாயிகள் தங்கள் கால்நடைகளை அடிக்கடி சரிபார்த்து, சந்தேகமுள்ள நிலையிலேயே அறிக்கையிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இந்த வைரஸ், 2023 நவம்பர் மாதத்தில் பிரித்தானியாவில் பரவத் தொடங்கியதுடன் 2024 மார்ச் மாதத்திற்குள் 199 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.