Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

பிரித்தானியாவில் புகைபிடித்தல் தடை செய்யப்படும் பகுதிகள்: கசிந்த தகவல்

0 0

பிரித்தானியாவில் இனி கால்பந்து அரங்கத்திற்கு வெளியே, மதுபான விடுதிகளில் புகைபிடித்தல் தடை செய்யப்படும் என்றே தகவல் கசிந்துள்ளது.

பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், தற்போது அமுலில் இருக்கும் புகைபிடிக்கும் தடையை வெளிப்புற இடங்களுக்கும் கடுமையாக நீட்டிக்க திட்டமிட்டுள்ளார் என்றே கூறப்படுகிறது. ஆனால் இந்த கடும்போக்கு நடவடிக்கையானது தத்தளிக்கும் மதுபான விடுதிகளுக்கு பேரிடியாக மாறும் என்றே கூறுகின்றனர்.

பிரித்தானியாவில் ஆண்டுக்கு 80,000 பேர்கள் புகைபிடித்தல் காரணமாக மரணமடைவதாக அரசாங்கம் தரப்பில் கூறப்படுகிறது. NHS மருத்துவமனைகளுக்கு இதனால் பேரழுத்தம் ஏற்படுவதுடன், வரி செலுத்துவோரின் பில்லியன் கணக்கான தொகை செலவிடப்படுகிறது.

சிறார்களையும், புகைபிடிக்காதவர்களையும் புகைப்பதால் ஏற்படும் தீங்குகளிலிருந்து பாதுகாக்க வேண்டும். இதனால் பிரித்தானியாவில் புகையை ஒழிக்க பல நடவடிக்கைகளை கருத்தில் கொண்டுள்ளதாக அரசாங்கம் தரப்பு தெரிவித்துள்ளது.

உணவகங்களுக்கு வெளியே, சிறு பூங்காக்கள், இரவு விடுதிகளுக்கு வெளியே நடைபாதையிலும் இனி பிகைபிடிக்க தடை செய்யப்படும் என்றே தகவல் கசிந்துள்ளது. ஆனால் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.