D
ஜெனிவாவின் (Geneva) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம், செப்டெம்பர் மாத அமர்வின் ஆரம்ப நாளிலேயே விவாதிக்கப்படவுள்ளது.
இதன்படி இலங்கை தொடர்பான விவாதம், செப்டெம்பர் 9 ஆம் திகதி, பேரவையின் 57 வது அமர்வின் ஆரம்ப நாளிலேயே இடம்பெறவுள்ளது.
இதன்போது, இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் (UN) மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், ஆராய்வின் பின்னர் அறிக்கை மீது ஊடாடும் உரையாடல் நடத்தப்படவுள்ளது.
பேரவையின் 51-1 தீர்மானத்தின்படி, இலங்கை தொடர்பான தகவல்களை சேகரிக்கும் திறனை ஒருங்கிணைக்கவும், பகுப்பாய்வு செய்யவும், பாதுகாக்கவும், கண்காணிப்பை மேம்படுத்தவும், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் மற்றும் மனித உரிமைகள் மீதான பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழலின் தாக்கம் உட்பட விடயங்களை ஆராயுமாறு மனித உரிமைகளுக்கான ஆணையாளர் அலுவலகம் கோரியுள்ளது.