D
எங்கு சென்றாலும் தன் மனைவியுடனேயே பயணிக்கும் இளவரசர் ஹரி, தனியாக சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளார்.
உடனே, ஹரிக்கும் அவரது மனைவியான மேகனுக்கும் ஏதோ பிரச்சினை என்று எண்ணிவிடவேண்டாம்.
அதாவது, ஹரி தனது மனதுக்குப் பிடித்த பணிகளைச் செய்வதற்கு மேகனும் ஆதரவு தெரிவித்துள்ளாராம்.
ஆகவே, டயானா பெயரில் விருது வழங்கப்படும் நிகழ்ச்சி முதலான பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக ஹரி தனியாக நியூயார்க் செல்கிறார்.
ஹரி தனியாக செல்வதில் இன்னொரு விடயமும் உள்ளதாக கருதப்படுகிறது. அதாவது, மன்னர் சார்லஸ் இன்னமும் தன் மகனுடைய வருகைக்காக காத்திருக்கிறார்.
மகன் ஹரியை அவர் மிகவும் அதிகமாக மிஸ் பண்ணுவதாகவும், மகனும் அவரது குடும்பமும் திரும்பி வருவதற்காக அவர் எப்போதும் ஆயத்தமாக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆக, தன் தந்தைக்கும், தான் நம்பத்தகுந்தவன்தான், தன்னால் தனியாக சொந்தக்காலில் நிற்கமுடியும் என காட்டுவதற்காகவும், ஹரி தனியாக நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.