Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

அரசாங்கத்தை ஏமாற்றிய வர்த்தகர்கள் : கோடிக்கணக்கான கறுப்பு பணம்

0 3

இலங்கையில் கோடிக்கணக்கான ரூபா வரி மோசடி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி 01 முதல் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் செலுத்த வேண்டிய மொத்த வரி தொகை 106,608 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் பணம் செலுத்தத் தவறியவர்களின் எண்ணிக்கை 4479 என மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கோடி முதல் 1.5 கோடி வரை வரி செலுத்தாதவர்கள் 3108 உள்ளனர். இதில் மது உற்பத்தி செய்யும் 28 நிறுவனங்களும் அடங்கும்.

இதில் உள்நாட்டு வருமானத் திணைக்களம் அதிக தொகையை வசூலிக்க வேண்டும், அந்த தொகை 105,600 கோடி ரூபாவாகும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தொடர்பான 350 நிலுவையிலுள்ள வரி வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது.

அரசாங்க அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் இருந்து 2934 முறையீடுகள் மற்றும் வரி ஆணைக்குழுவிடமிருந்து 1505 முறையீடுகள் நிலுவையில் உள்ளதாகவும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.