Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

உலகின் மிகவும் பிரபலமான 10 சமூக வலைத்தளங்கள்!

0 1

உலகின் மிகவும் பிரபலமான 10 சமூக வலைத்தளங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியல் Data Reportal இன் சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய உலகளவில் அதிக இணைய பயனர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக முகப்புத்தகம் (Facebook) தொடர்ந்து முதலிடத்திலுள்ளது.

இதேவேளை இரண்டாவது இடத்தில் யூடியூப் (YouTube) மற்றும் மூன்றாவது இடத்தில் இன்ஸ்டாகிராம்(Instagram) உள்ளன.

Data Reportal இன் சமீபத்திய தரவுகளின் படி உலகளாவிய இணைய பயனர்களின் மொத்த எண்ணிக்கை 5.35 பில்லியனாக உள்ளது.

மேலும் 2023ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து புதிதாக 97 மில்லியன் பயனர்கள் இணையத்தை பயன்படுத்தத் தொடங்கியதன் காரணமாக இணைய பயனர்களின் எண்ணிக்கை 1.8 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Leave A Reply

Your email address will not be published.