Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

எலான் மஸ்கிற்கு காலக்கெடு விதித்த பிரேசில் நீதிமன்றம்

0 1

உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைதளமாக எக்ஸ் (X) தளம் திகழ்ந்து வரும் நிலையில் 24 மணி நேரத்துக்குள் பிரேசில் (Brazil)நாட்டில் எக்ஸ் தளம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமீபத்தில் பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால் எலான் மஸ்க் (Elon Musk) அங்குள்ள எக்ஸ் அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை அதிரடியாக நீக்கினார்.

பெரிய அளவில் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து எக்ஸ் தளத்தில் பல திருத்தங்களை மேற்கொண்டார்.

எனினும், அலுவலகம் மூடப்பட்டாலும் பிரேசிலில் எக்ஸ் சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் பிரேசில் உச்ச நீதிமன்றம், பிரேசில் நாட்டில் X தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை அடுத்த 24 மணி நேரத்தில் நியமிக்க வேண்டும் என்றும், தவறினால் பிரேசிலில் எக்ஸ் தளம் முடக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.