D
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் 35 சதவீத வாக்குகளை பெற்று நாமல் ராஜபக்ஷ வெற்றிபெற முடியும் என இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக தெரிவித்துள்ளார்.
35 சதவீதமான மக்கள் நிச்சயமாக “மகிந்த சிந்தனை” கொள்கையுடன் இருப்பார்கள் எனவும் அதற்கமைய, நாமல் ராஜபக்ஷவுக்கு அந்தளவு வாக்குகள் கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இத்தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் ஐம்பது வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற முடியாது. 35 வீத வாக்குகளைப் பெறும் வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை இதுவரை வெளியான கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ச நான்கு சதவீத வாக்குகளை பெறுவார் என எதிர்வு கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.