D
தற்போதுள்ள நிலையில், எந்தவொரு வேட்பாளரும் சமஷ்டி அல்லது சுயநிர்ணயம் போன்ற சொற்களை கனவிலும் உச்சரிக்க மாட்டார்கள்.
சமஷ்டி அல்லது சுயநிர்ணயம் என்பது இலங்கையை இன்னொரு நாடாக பிரிக்கும் ஒரு விடயம் என பெரும்பாலான தென்னிலங்கை மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது இலங்கை நாடாளுமன்றத்தையோ அல்லது இலங்கையின் அரசியலமைப்பையோ தாண்டி மேற்கொள்ளப்படாது என்பது யதார்த்தம் ஆகும்.
ஆனால், அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தச்சட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது சட்டத்தை மீறும் செயற்பாடு ஆகும்.
எனினும், ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சமஷ்டி அல்லது சுயநிர்ணயம் தொடர்பாக அதிகம் பேசப்படுவதால் தென்னிலங்கை மக்களுக்கு ஒரு அச்சம் ஏற்படுகின்றது.