D
12 வருடங்களின் பின்னர் 420 ரூபாவாக உயர்ந்த ரூபாவின் பெறுமதி : துர்ப்பாக்கிய நிலையாக கருதும் ரணில் தரப்பு
யுத்தம் முடிந்து 12 வருடங்களில் டொலரின் பெறுமதி 420 ரூபாய் வரை அதிகரித்தது துர்ப்பாக்கிய நிலைமையாகும் என்று இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
பண்டாரவளையில் நடைபெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் இலசமாக பகிர்ந்த அரிசியில் புழு இருப்பதாக ஜேவிபியினர் போலி பிரச்சாரம் செய்கின்றனர். அவர்கள் போல் அன்றி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை கட்டியெழுப்ப பாடுபட்டார். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டதால் நாம் தானாக முன்வந்து ஜனாதிபதிக்கு வாக்களிக்க வேண்டும்.
யுத்தம் முடிந்து 12 வருடங்களில் டொலரின் பெறுமதி 420 ரூபாய் வரை அதிகரித்தது துர்ப்பாக்கிய நிலைமையாகும்.
சஜித் பிரேமதாச காலி முகத்திடலுக்கு சென்ற போது மக்கள் அடித்து விரட்டினர். அனுர குமார திசாநாயக்கவும் கனவிலும் தன்னால் நாட்டை பொறுப்பேற்க முடியாது என்று சொன்னார்.
எனவே இவ்வாறனவர்களிடம் நாட்டை கையளித்து விட்டு அவர்களால் முடியாத தருணத்தில் மீண்டும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தேடி வந்தால் அவர் நாட்டை ஏற்றுகொள்ள கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும்.
தேர்தலின் மூலம் மக்கள் வழங்கும் நாட்டை மட்டுமே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.