D
பூமியின் வெளிப்புற மையத்திற்குள் ஒரு டோனட் வடிவ பகுதி மறைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய (Australia) தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் மூலமே இந்த அமைப்பு தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளது.
இது பூமியின் திரவ மையத்திற்குள் மனிதர்கள் நடக்கும் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியாகும்.
பூமிக்கு உட்புற கோர் – திட அடுக்கு மற்றும் வெளிப்புற கோர் – திரவ அடுக்கு என இரண்டு முக்கிய அடுக்குகள் உள்ளன.
இதற்கமைய, இந்த புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட டோனட் வடிவ பகுதி பூமியின் வெளிப்புற மையத்தின் உச்சியில் உள்ளது.
குறித்த பகுதி தொடர்பில், பாரிய பூகம்பங்கள் ஏற்பட்டால் பதிவு செய்யப்படும் நில அதிர்வு அலைகளை ஆய்வு செய்து அடையாளம் காணும் போதே கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தபகுதி, நில அதிர்வு அலைகள் வெளிப்புற அலைகளின் குறுக்கே பயணிக்கும்போது, மெல்லுறையின் எல்லையில் மெதுவாக செல்வதாக ஆய்வு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.