D
முன்னர் நடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 6 எம்.பிக்களுக்கு பிரதமர் பதவியை தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் மகிந்த வென்ற பின்னர் அந்த ஆறு எம்.பிக்களுக்கும் ஏமாற்றமே கிடைத்தது என்று வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடந்த நாட்களில் சீர்திருத்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட வேளையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது எதிர்கால அரசியல் பற்றி சிந்திக்காமல் மிகக் கடுமையான சவால்களுக்கு முகம்கொடுத்தார்.
சில அமைச்சர்கள் அடுத்த ஜனாதிபதி தேர்தலை கருத்தில் கொண்டு செயற்படுங்கள் என்று ஜனாதிபதியிடம் கோரினர். உங்கள் செயற்பாடுகள் அடுத்த ஜனாதிபதியாக தெரிவாக தடையாக இருக்கலாம் என்றும் அமைச்சர்கள் வலியுறுத்தினர். ஆனால் ஜனாதிபதி “தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் சரியான நேரத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகளை எடுக்க வேண்டும்” என்றார்.