D
அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தேர்தலுக்காக கோடி கோடியாக பணம் கொட்டுகிறார், அப்படியான அனுரகுமாரவால் கடந்த காலத்தில் ஏன் ஒரு சின்ன உதவியாவது மக்களுக்கு செய்ய முடியாமல் போனது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வன்னி மாவட்ட நடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.
வவுனியா (Vavuniya), வைரவ புளியங்குளத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தொவித்ததாவது, “அன்று கோட்டபாய முஸ்லிம்களின் வாக்கை கொள்ளையடிக்க அலிசப்ரி என்ற ஒருவரை கொண்டு திரிந்தார். அவர் கோட்டபாயவை புகழ்ந்து வாக்கை கொள்ளையடித்தார்.
கடைசியில் எமது மையத்துக்களை எரித்துக் கொண்டிருந்த போதும், எம்மை சிறைக்குள் அடைத்த போதும் அமைச்சுப் பதவியை அலிசப்ரிக்கு கோட்டபாய வழங்கினார்.
அது போலவே அனுரவும் தொப்பி போட்ட முஸ்லிம் மௌலவி ஒருவரை கூட்டிக் கொண்டு திரிந்து வாக்கை கொள்ளையடிக்கப் பார்க்கிறார்.என்றார்.