D
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 672 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த 672 சந்தேகநபர்களும் போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 664 ஆண்களும் 08 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேகநபர்களிடமிருந்து 165 கிராம் 736 மில்லி கிராம் ஹெரோயின், 211 கிராம் 79 மில்லி கிராம் ஐஸ், 2,151 கஞ்சா செடிகள் மற்றும் 612 கிராம் 795 மில்லி கிராம் கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.