D
கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வாகன தரிப்பிடத்தில் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான 118 வெளிநாட்டு மதுபான போத்தல்களை மறைத்து வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று விமான போக்குவரத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கொழும்பை மையமாக கொண்டு மதுபான வியாபாரம் செய்யும் வர்த்தகர் என தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் கொண்டு வரும் மது போத்தல்களை விமான நிலைய வாகன தரிப்பிடத்தில் குறைந்த விலைக்கு பெற்று இலங்கை முழுவதும் உள்ள சுற்றுலா விடுதிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருகின்றார்.
கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால், அதியுயர் தரத்தை கொண்ட 99 மதுபான போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.