Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

ஜனாதிபதி தேர்தலில் ரணில் வெற்றி பெறுவார்! மூத்த பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்டுள்ள காரணம்

0 2

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவாரென மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் களம் தீவிரமடைந்துள்ள நிலையில் இது தொடர்பான தனது நிலைப்பாட்டை அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது ‘இதுவரை பிரதான இரண்டு கட்சிகளின் வேட்பாளர்கள் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டனர். ஆனால் இம்முறை மூவர் போட்டிக்களத்தில் உள்ளனர்.

எதிர்க்கட்சி தரப்பில் இருக்கும் இருவரின் வாக்குகள் இரண்டாக பிரியும் நிலைமை உள்ளது . அது ரணிலுக்கு சாதகமாக அமையும் என விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.  

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் ரணிலுக்கு, அரசியல்வாதிகள் உட்பட பலர் தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கவுக்கு தபால் மூல வாக்குகளில் அனுகூலம் உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.      

Leave A Reply

Your email address will not be published.