D
ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.
நாமல் ராஜபக்சவின் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளதாக கட்சி குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தேர்தல் ஆணைககுழுவிற்கும் பொலிஸாருக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வெலிமடை திரையரங்கில் அண்மையில் நடைபெற்ற நாமல் ராஜபக்சவின் பிரசாரக் கூட்டத்திற்கு விளையாட்டுத் துப்பாக்கியுடன் சென்ற இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கூட்டம் நடைபெறும் போது மண்டபத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த பாடசாலை மாணவன் மற்றும் பல்கலைக்கழக மாணவனிடம் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த விளையாட்டுத் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வெலிமட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.