D
சிகாகோவில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்க கலைவிழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.
தமிழகத்தில் தொழில் துறைக்கான முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார்.
தமிழகத்திற்க்கான முதலீடுகளை ஈர்க்க ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் நாடுகளுக்கு சென்றுள்ள அவர் தற்போது அமெரிக்கா சென்றுள்ளார்.
தமிழ்நாட்டிற்க்கான தொழில் முதலீடுகளை ஈர்த்துவிட்டு செப் 14ஆம் திகதி திரும்பி வரும் வகையில் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் சிகாகோவில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்க கலைவிழாவில் பங்கேற்று உரையாற்றியுள்ளார்.
அவர் கூறியதாவது..,
“அமெரிக்க வாழ் தமிழர்களின் முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும் என்று தோன்றுகிறது.
தமிழகத்தில் நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் எப்படி இருக்குமோ, அதைப்போல அல்ல அதை விட மிக சிறப்பாக இந்த நிகழ்ச்சி உள்ளது.
அமெரிக்க வாழ் தமிழர்களுடன் இருப்பது தமிழ் மண்ணில் இருக்க கூடிய உணர்வை தருகிறது” என்றார்.