D
ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவுடன் நான் விவாதத்திற்கு வரும் முன்னர் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதி பொருளாதாராமா இறக்குமதி பொருளாதாராமா என்பதை தெளிவுப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குருநாகலில் இடம்பெற்ற வர்த்தகர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
“அநுரகுமார திஸாநாயக்காவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை இரத்து செய்ய உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்வதால் இலங்கையை எவ்வாறு ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்ற முடியும்? பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பாவிட்டால் எமக்கு நிவாரணங்கள் மற்றும் சலுகைகள் கிடைக்கப்பெறாது.
அனுரகுமார திஸாநாயக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் சூரியபெரும ஆகியோர் தங்களுக்குள் விவாதமொன்றை நடத்தி முதலில் அவர்களின் பொருளாதாரக் கொள்கையை தீர்மானிக்க வேண்டும்.
அவ்வாறு உங்கள் பொருளாதாரக் கொள்கையை நீங்கள் அறிவித்ததன் பின்னர் நானும் நீங்களும் இணைந்து சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளருடன் கலந்துரையாடுவோம். என்றார்.