D
முஸ்லிம் தலைவர்கள் பலர் வடக்கு – கிழக்கு இணைப்பை ஏற்க மறுப்பதாலேயே கிழக்கிலங்கை முஸ்லிம்கள் மத்தியில் தமிழ் பொது வேட்பாளரை பிரசாரம் செய்ய நான் கோரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாதாந்த கேள்வி பதில் அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அத்துடன், வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சனைகளுடன் ஒப்பிடுகையில் மலையக மக்களின் பிரச்சினைகள் வேறுபட்டவை.
தமிழ் பேசும் மக்கள் எங்கிருந்தாலும் எமது தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க முன்வர வேண்டும். அவர்கள் சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதை நாம் மன மகிழ்வுடன் வரவேற்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணத் தமிழ் மக்களிடையே இன்று ஒரு மறுமலர்ச்சி பரிணமித்திருக்கின்றது. உலக அரங்குகளில் எமது குரல் ஓங்கி ஒலிக்க நாம் ஒரு பலமான மக்கள் கூட்டம் என்ற உண்மையை நிலைநிறுத்துவது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.