D
பதுளை, ஹல்துமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றின் போது இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் தீவிரமடைந்து மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் ஹல்துமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் எனவும், அவர்கள் ஹல்துமுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவ ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.