Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

குறைந்த வேலை நாடுகள் பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா!

0 1

உலகின் சில நாடுகளில் சிறு நிறுவனங்கள் வேலை வார நாட்களை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு ஆகிய காரணங்களால் வேலை நாட்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், குறைந்த சராசரி வேலை வார நாட்களை கொண்டு 5 நாடுகள் எவையென பார்க்கலாம்.

குறைந்த வேலை நாடுகள் பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா! | Which Country Works The Longest Hours

வனுவாட்டு: ஒருவர் வாரத்திற்கு சராசரியாக 24.7 மணிநேரம்

கிரிபட்டி : ஒருவர் வாரத்திற்கு சராசரியாக 27.3 மணிநேரம்

மொசாம்பிக்: ஒருவர் வாரத்திற்கு சராசரியாக 28.6 மணிநேரம்

ருவாண்டா: ஒருவர் வாரத்திற்கு சராசரியாக 28.8 மணிநேரம்

ஆஸ்திரியா: ஒருவர் வாரத்திற்கு சராசரியாக 29.5 மணிநேரம்

மிக நீண்ட வேலை வாரங்களைக் கொண்ட 5 நாடுகள் எவையென பார்க்கலாம்.

குறைந்த வேலை நாடுகள் பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா! | Which Country Works The Longest Hours

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: ஒரு வேலையில் இருப்பவருக்கு வாரத்திற்கு சராசரியாக 52.6 மணிநேரம்

காம்பியா: ஒரு வேலை செய்யும் நபருக்கு வாரத்திற்கு சராசரியாக 50.8 மணிநேரம்

பூட்டான் (Bhutan): ஒரு வேலையில் இருப்பவருக்கு வாரத்திற்கு சராசரியாக 50.7 மணிநேரம்

லெசோதோ: ஒரு வேலையில் இருப்பவருக்கு வாரத்திற்கு சராசரியாக 49.8 மணிநேரம்

காங்கோ: பணிபுரியும் நபருக்கு வாரத்திற்கு சராசரியாக 48.6 மணிநேரம்

இந்த மணிநேரங்கள் சமமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஐக்கிய அரபு எமிரேட்ஸில், வேலை செய்பவர்களில் 46% பேர் வாரத்திற்கு 49 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்கிறார்கள்.

இது ‘அதிகப்படியான வேலை வரம்பு’ என்று கருதப்படுகிறது.

ஆஸ்திரியாவில் பணிபுரிபவர்களில் 8% பேர் மட்டுமே வரம்புக்கு மேல் வேலை செய்கிறார்கள்.

சராசரி அமெரிக்கத் தொழிலாளி வாரந்தோறும் 36.4 மணிநேரத்துடன் நடுநிலையில் உள்ளார்.

இந்த எண்ணிக்கை தென் கொரியா (37.9 மணி நேரம்), சீனா (46.1), ரஷியா (37.8) மற்றும் இந்தியா (47.7) ஆகியவற்றை விட குறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.