D
2019ஆம் ஆண்டுக்கு பின்னர் சுவிட்சர்லாந்து கட்டாய நாடுகடத்தலை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக புலம்பெயர்தலுக்கான சுவிஸ் மாகாணச் செயலகம் உறுதி செய்துள்ளது.
இதற்கமைய, கடந்த 11ஆம் திகதி ஆப்கன் நாட்டவர்கள் இருவரை அவர்களுடைய நாட்டுக்குத் திருப்பி அனுப்பியுள்ளதாக புலம்பெயர்தலுக்கான சுவிஸ் மாகாணச் செயலகம் தெரிவித்துள்ளது.
சுமார் ஐந்து ஆண்டுக்கு பிறகு சுவிட்சர்லாந்து இவ்வாறான ஒரு கட்டாய நாடுகடத்தலை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், குறித்த ஆப்கன் நாட்டவர்களை அவர்களின் சொந்த நாட்டில் இறக்கி விட்டுள்ளதுடன் அவர்களின் செலவுகளுக்காக ஆளுக்கு 500 சுவிஸ் ஃப்ராங்குகள் பணத்தினையும் சுவிஸ் அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.
மேலும், முன்னதாக அவர்கள் இருவரும் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது சுவிட்சர்லாந்து அரசாங்கத்தால் இஸ்தான்புல்லுக்கு மீண்டும் திருப்பியனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.