D
இதேவேளை, புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற மரபு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் 03 நாள் செயலமர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 25, 26, 27 ஆகிய திகதிகளில் செயலமர்வு நடைபெறவுள்ளதுடன் இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று (16) வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் 21ம் திகதி காலை 10 மணிக்கு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் 10வது நாடாளுமன்றத்திற்கு ( Parliament of Sri Lanka) தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நாளை (17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளை முதல் இணையவழி முறைமை ஊடாக புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மை பதிவு செய்துக் கொள்ளலாம் என நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு தேவையான தகவல்களை அறிந்து கொள்வதற்காக எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் இரண்டு தகவல் சாளரங்களை திறப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.