D
இலங்கையின் மூலோபாய சொத்துக்கள் மற்றும் வளங்கள் மீது உலகளாவிய கவனம் காலணித்துவ ஆட்சிக்காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது.
இந்தவகையில் நாட்டின் கிராஃபைட் (graphite) துறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான போட்டியில் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தற்போது குறித்த தொழில்துறையில் ஈடுபட்டுள்ள கனேடிய மற்றும் அவுஸ்திரேலிய நிறுவனங்களுக்கு மேலதிகமாக முன்னெடுக்கப்படும் புதிய முயற்சிகளாகும்.
நிபுணர்களின் கூற்றுப்படி, இலங்கையில் உயர்தர சிரை கிராஃபைட்டுக்கு வளமான வைப்புகள் உள்ளன.
அதிலும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 3,000க்கும் மேற்பட்ட கைவிடப்பட்ட குழிகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், நாட்டில் கிராஃபைட் தொழில்துறையை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்திய (India) அரசு மற்றும் புவியியல். சுரங்க ஆய்வுப் பணியகத்தின் அதிகாரிகளுக்கு இடையில் ஆழமான கலந்துரையாடல் ஒன்றும் நடத்தப்பட்டுள்ளது.