Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

பேருந்துக்கு தீ வைத்த பயங்கரவாதிகள் : பாகிஸ்தானில் பரபரப்பு

0 2

பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பேருந்து ஒன்றை வழிமறித்து, அதில் பயணித்த பயணிகளைச் அச்சுறுத்தி பேருந்துக்குத் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெஹ்ரீக்-இ தாலிபான் பாகிஸ்தான் (TTP) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளே இவ்வாறு செய்துள்ளனர்.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் திராசிண்டாவிலிருந்து தேரா இஸ்மாயில் கானுக்குச் செல்லும் பேருந்தை, தரபன் தெஹ்சில் என்ற இடத்தில் தடுத்து நிறுத்திய பயங்கரவாதிகள், பயணிகளை வலுக்கட்டாயமாக இறக்கி அரசாங்கத்துக்கு ஆதரவாக உள்ளதாக கூறி சித்திரவதை செய்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து பேருந்தை தீவைத்து எரித்து சாம்பலாக்கிய பின் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

பகல் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தெற்கு மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்து கொந்தளிப்பான சூழல் நிலவுவதால் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அப்பகுதியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.