D
இந்தியாவுடன் 1999ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட லாகூர் பிரகடனத்தை தமது நாடு மீறியதை பாகிஸ்தானிய (Pakistan) முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் (Nawaz Sharif) ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்த சமாதான ஒப்பந்தத்தில் செரீப்பும் அப்போதைய இந்திய பிரதமர் அடல் பிஹரிபாயும் ( Atal Bihari) கையெழுத்திட்டுள்ளதோடு முன்னாள் ஜனாதிபதி ஜெனரல் பெர்வேஸ் முசாரப்பால் ஆரம்பிக்கப்பட்ட கார்கில் மோதலுக்கு தமது தவறே காரணம் என்று அவர் மறைமுகமாக கூறியுள்ளார்.
1998ஆம் ஆண்டு மே 28ஆம் திகதியன்று, பாகிஸ்தான் ஐந்து அணு சோதனைகளை நடத்தியுள்ளது.இதைத் தொடர்ந்து, வாஜ்பாய் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளார்.
இதன்போது இரண்டு தலைவர்களும் 1999 பெப்ரவரி 21ஆம் திகதி லாகூர் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தம் அமைதியையும் பாதுகாப்பையும் பராமரிப்பதையும், மக்களிடமிருந்து தொடர்புகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
எனினும் பாக்கிஸ்தானியப் படைகள் ஜம்மு மற்றும் காஸ்மீரில் கார்கில் மாவட்டத்தில் ஊடுருவியதால், 1999 மார்ச்சில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் மோதல் ஆரம்பமானது.இதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
இதேவேளை பாகிஸ்தான் நடத்திய முதல் அணுசக்தி சோதனையின் 26ஆவது ஆண்டு நிறைவைக் குறித்த கருத்துரைத்துள்ள நவாஸ் செரீப், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் அணுசக்தி சோதனைகளைத் தடுப்பதற்காக பாகிஸ்தானுக்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்தார்.
எனினும் அதனை ஏற்றுக்கொள்ள தாம் மறுத்து விட்டதாகவும் நவாஸ் செரீப் குறிப்பிட்டுள்ளார்.