Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

பெருந்தொகை சம்பளத்துடன் டென்மார்க்கில் ஏராளமான வேலை வாய்ப்புகள்: எச்சரிக்கை

0 2

டென்மார்க்கில் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக முகநூலில் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி வரும் மோசடி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாலி தொடர்பான முகநூல் பக்கத்தில் இந்த மோசடி குறித்த தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த போலி விளம்பரத்தில், நோயாளிகளை பராமரிக்கும் பணியாளர்கள், செவிலியர்கள், பேக்கிங் தொழிலாளர்கள், தொழிற்சாலை பணியாளர்கள், பாதுகாவலர்கள், கொத்தனார்கள், கட்டுமான தொழிலாளர்கள் போன்ற தொழில் வெற்றிடங்கள் உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், வேலைக்காக வெளிநாடு செல்வது இலவசம் என்றும், மாதச் சம்பளம் மூன்று இலட்சம் ரூபாய் என்றும் கூறப்படுகின்றது.

முகநூல் பக்கத்தில் இந்த பதிவை ஏராளமானோர் பார்வையிட்டுள்ளதுடன், மேலும் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு குறித்து விசாரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சிடம் வினவிய போது, ​​இது முழுக்க முழுக்க மோசடியான வர்த்தகம் எனவும், டென்மார்க் போன்ற ஒரு நாட்டில் இவ்வாறான தொழில் வாய்ப்புகள் இதுவரை எமது நாட்டிற்கு கிடைக்கவில்லை எனவும் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இவ்வாறான மோசடியாளர்களிடம் சிக்கி பணத்தை இழக்க வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், உயர் தொழில் தகைமைகளைக் கொண்டவர்களுக்குக் கூட தொழில் வாய்ப்புகள் இல்லை என அந்நாட்டில் வசிக்கும் இலங்கை வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.