D
சீதுவை லியனகேமுல்ல பிரதேசத்தில் பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
குறித்த பெண் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் ஊழியர் எனவும் நேற்று அதிகாலை லியனகேமுல்ல பிரதேசத்தில் வைத்து அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இரவு விடுதியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மோதல் நீண்ட தூரம் சென்றமையினால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உஸ்கொட மனகே திசர மதுவந்தி என்ற 36 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். அவர் காலி மேற்கு படுவத்த நெலுவ பிரதேசத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.
6 வருடங்களுக்கு முன்னர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிக்காக வந்தவர், பின்னர் சீதுவையில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் பணிபுரியும் நபருடன் அந்தப் பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் தற்காலிகமாக தங்கியுள்ளார்.
இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற சம்பவமொன்றின் அடிப்படையில், தங்கியிருந்த நபருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், நேற்று அதிகாலை 2 மணிக்கும் 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இவரும் புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு முன்பாக குறித்த நபர் நடந்து செல்லும் காட்சி பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியிருந்தது.
இந்த தேவாலயத்திற்கு எதிரே உள்ள வீதியிலேயே குறித்த பெண் பலத்த வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக்க சில்வா சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டதுடன் அவரது சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.