D
குருநாகல்-குளியாப்பிட்டி மருத்துவ அதிகாரி அலுவலகத்தினால், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சுகாதாரப் பரிசோதனையின்போது, குளியாப்பிட்டி பேருந்து நிலையத்தில் உள்ள சாரதிகள் மற்றும் வர்த்தகர்கள் உட்பட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் (SLTB) உயர் இரத்த அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது.
இதன் மூலம் அவர்கள் அதிக ஆபத்தில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களும் உயர் இரத்த அழுத்தத்தால் (Blood Pressure) பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அவர்கள் இருதய நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்று மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பிரதேசத்தில் பணியாற்றும் அனைத்து தனியார்துறை ஊழியர்கள் மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கும் முறையான மருத்துவ பரிசோதனைகளை வழங்குவதற்காக விரைவில் மருத்துவ முகாமை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சமூகத்தின் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.