D
யுத்தம் மற்றும் காலிமுகத்திடல் (Galle Face) போராட்டங்களின் போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை சிறப்பாக செயற்பட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil wickremesinghe) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் சாதகமான மற்றும் பாதகமான அம்சங்கள் இருக்கின்றன.
எனவே, ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்கும் திட்டத்தை அறிவிக்கவில்லை.
தற்போது, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் சில மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் மற்றவர்கள் பல்வேறு மாகாணசபைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நாடாளுமன்ற கண்காணிப்புக் குழுக்களும் இதற்காக செயற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பல சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படும் நிலையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் படிப்படியாக நாடாளுமன்றத்திற்கு மாற்றப்படும்.
அதேவேளை, ஜனாதிபதி, நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறக்கூடிய சட்டங்களை இயற்றுவது மிகவும் அவசியமானது” என சுட்டிக்காட்டியுள்ளார்.