D
கொழும்பில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகானிலிருந்து சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
45 முதல் 50 வயதிற்கு இடைப்பட்ட மஞ்சள் பூக்கள் கொண்ட சிவப்பு நிற ஆடை அணிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்டேஸ்புர பகுதியில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.