Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

தமிழினப்படுகொலை தொடர்பில் கனேடிய நாடாளுமன்றத்திற்கு மனு

0 2

இலங்கையில் நடந்த தமிழினப்படுகொலை குறித்து கனேடிய (Canada) நாடாளுமன்றம், சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்து செல்லவேண்டும் என்று கோரும் மனு தொடர்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பானது, எதிர்வரும் 2024 ஜூன் 2ஆம் திகதி மாலை 4 மணி முதல் 6 மணிவரை, கனடாவிலுள்ள மார்க்கம் வீதி 27, (Markham Rd 27, Scarborough,ON M1X 1L9) என்ற இடத்தில் அமைந்துள்ள முன்னணி சமூக மையத்தில் (Frontline Community Centre) இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் சேனின் (Shaun Chen) ஒத்துழைப்புடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) கூட்டமைப்பினால் இந்த செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த மனுவில், “இனப்படுகொலை குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டனை வழங்குதல் தொடர்பான உடன்படிக்கையின் கீழ் இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) முன் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2006 முதல் 2009 வரையிலான ஆயுதப் போரின் இறுதிக் கட்டத்தில் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் உள்ளிட்ட கொடூரமான குற்றங்களுக்கு இலங்கையை பொறுப்பேற்கச் செய்யுங்கள்.

மேலும், பொறுப்புக்கூறலின் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்த அட்டூழியக் குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட தலைவர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளின் அவசியத்தை வலியுறுத்துங்கள்” என கோரப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.