D
காசாவில் பஞ்சம் ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க யுஎஸ்எய்ட் (USAID) அமைப்பின் தலைவர் சமந்தா பவர் (Samantha Power) எச்சரித்துள்ளார்.
தெற்கு காசா நகரமான ரஃபாவில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதால், அமெரிக்கா எச்சரித்துள்ள “பேரழிவு விளைவுகள்” நிஜமாகி வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
பல மாதங்களாக, ஜனாதிபதி பைடன் மற்றும் அவரின் நிர்வாகமும், ரஃபாவில் (Rafah) ஒரு பெரிய தரை இராணுவ நடவடிக்கை பொதுமக்களை பெரும் ஆபத்தில் ஆழ்த்தும் என்று இஸ்ரேலுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம்.
தற்போது ரஃபா மற்றும் எகிப்து- காசா எல்லையைச் சுற்றி மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் இடம்பெறுகின்றபோதும் அமெரிக்கா நீண்டகாலமாக எச்சரித்து வரும் பேரழிவு விளைவுகள் யதார்த்தமாகி வருகின்றன.
இந்நிலையில், காசாவின் நிலைமைகள் முன்னர் எந்தக் காலகட்டத்தையும் விட இப்போது மோசமாக உள்ளன.
95 சதவீத மக்கள் பல மாதங்களாக சுத்தமான தண்ணீரைப் பெறவில்லை என்பதோடு ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பசியின் பேரழிவு நிலைகளை எதிர்கொள்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
காசாவில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 36,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போரிலிருந்து தஞ்சமடைந்துள்ள தெற்கு காசா நகரமான ரஃபாவில் உள்ள அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை அடுத்தே சமந்தா பவரின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.