D
சிங்கப்பூரின் குடிவரவு குடியகல்வு ஆய்வு ஆணையத்தின் பிரதிநிதிகள் 06 பேர் ஒரு வார காலப் பயணமாக இலங்கை வந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சர் டிரான் அலஸ், சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர், சண்முகத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சிங்கப்பூர் போன்ற தரத்தை அடைந்து, மேம்பட்ட தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து குடிவரவு முறையை மேம்படுத்த ஒத்துழைப்பை வழங்குவதே இந்த விஜயத்தின் நோக்கம் என அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் குடிவரவு, வீசா வழங்கல் மற்றும் குடியுரிமை தொடர்பான அனைத்து செயல்முறைகளையும் நவீனமயமாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் இந்த ஒத்துழைப்பு பங்களிப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் மற்றும் குடிவரவுத் திணைக்களத்தின் அனைத்து அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வுக்குப் பின்னர் சிங்கப்பூரில் தற்போதுள்ள உயர்நிலையைக் கொண்டுவர பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வழங்குமாறு சிங்கப்பூர் பிரதிநிதிகளிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.