D
இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த (Sampath Thuyacontha) அறுகம் குடா(Arugam bay)பகுதிக்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த பகுதியில், தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் கண்காணிப்பதற்காகவே இன்று(10.11.2024) அவர் அங்கு சென்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சமீபத்தில், அறுகம் குடா பகுதியிலுள்ள பல சுற்றுலா தளங்களில், இஸ்ரேலியர்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்துவதற்கான திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை, தாக்குதல் தொடர்பில் தங்களுக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளதால், அமெரிக்க உள்ளிட்ட சில நாடுகள், அறுகம் குடா பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தங்கள் பிரஜைகளை முன்னதாக அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், பாதுகாப்பு செயலாளர் அறுகம் குடா பகுதிக்குக் கள ஆய்வு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.