D
அநுர குமார திஸாநாயக்க(Anura kumara dissanayaka) முட்டாள்தனமான கதைகளை கூறுகிறார். இவ்வாறான முட்டாள்களை இந்த நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது’ என தெரிவித்தார் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna ranatunga).
சங்க, வேதம், குரு, விவசாயி மற்றும் தொழிலாளர் ஆகிய ஐந்து பெரும் சக்திகளை ஒன்று திரட்டக்கூடிய இடதுசாரி முகாம் ஐக்கிய சுதந்திர முன்னணி என்பதை அவர் வலியுறுத்துகிறார்.
பியகம தொகுதியின் மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்த ஒரு நாட்டில் தற்போது 07 பில்லியன் டொலர் கையிருப்பு இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இங்கு தெரிவித்தார்.