D
எதிர்வரும் 2 வாரங்களுக்குள் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான யோசனையை முன்வைத்தால், ஜூலை மாத நடுப்பகுதிக்குள் கட்டணத்தை குறைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான யோசனை மே மாதம் முதலாம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், கடந்த 27ஆம் திகதியிலிருந்து மேலும் 2 வார கால அவகாசம் வழங்குமாறு மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த பிரேரணை கிடைக்கப்பெற்றதன் பின்னர், பொதுமக்களின் ஆலோசனைக்குப் பின்னர் மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியும் என பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், , இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அதன் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க, மின்சார கட்டணத்தை 10 முதல் 20 வீதம் வரை குறைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதற்கு பதில் வழங்கிய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேற்படி கருத்தை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.