D
இன்றைய ராசிபலன் ஜூன் 2, 2024, குரோதி வருடம் வைகாசி 20, ஞாயிற்று கிழமை, சந்திரன் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். கடகம், சிம்ம ராசியில் உள்ள சேர்ந்த ஆயில்யம், மகம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன் தரக்கூடிய நாள். வீட்டிற்கு விருந்தினர்களின் வருகை செலவை தந்தாலும், மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவிலுள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கும். பொன், பொருள் சேர்க்க உண்டாகும். எந்த ஒரு செயலிலும் நேர்மையாகவும், ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாள். பணம் தொடர்பாக சில நல்ல செய்திகள் தேடி வரும். ஆபத்தான வேலைகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று பரபரப்பான நாளாக அமையும். புதிய வேலையைத் தொடங்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். வேலையை முடிப்பதற்காக அலைச்சல் அதிகரிக்கும். உங்களின் சிறப்பான பேச்சு மற்றும் செயல்பாடு பிறரை உங்கள் பக்கம் இருக்கும். பெரிய லாபத்திற்கு ஆசைப்பட்டு சிறிய இலாபத்தை விட்டு விட வேண்டாம். பணியிடத்தில் உங்களின் வேலையில் சிறப்பாக செயல்படுவீர்கள். பாராட்டு கிடைக்கும்.
அடுத்த வார ராசிபலன் ஜூன் 3 முதல் 9 வரை: 5 கிரகங்களைச் சேர்க்கை அதிர்ஷ்டத்தையும், தன லாபத்தையும் பெறும் ராசிகள்
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள். பணியிடத்தில் எதிரிகள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பார்கள். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளைச் சரியான நேரத்தில் நிறைவேற்ற முயற்சி செய்யவும். பண பரிவர்த்தனைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். சட்டம் தொடர்பான விஷயத்தில் கவனமாக செயல்படவும். உங்கள் வேலைகளை பொறுப்புடன் செய்து முடிக்கவும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன் கிடைக்கக் கூடிய நாள். உங்கள் இந்த தைரியம், வீரம் அதிகரிக்கும். உங்களின் பெரிய இலக்கை நோக்கி முன்னேற கூடிய நாள். உங்களின் பிரச்சனைகளுக்கு மூத்தவர்களின் சிறப்பான ஆலோசனையால் தீர்வு கிடைக்கும். வியாபாரம் தொடர்பான புதிய திட்டங்களில் கவனம் செலுத்தவும். இன்று வண்டி வாகன பயன்பாட்டில் நிதானம் அவசியம்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாள். தொழிலில் நல்ல லாபம் கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள். உற்சவத்தில் உள்ளவர்கள் பதவி, கௌரவம் அதிகரிக்கும். சில முக்கிய விவாதங்களில் ஈடுபடுவீர்கள். இன்று ஒரு வேலையும் அவசர அவசரமாக செய்வதை தவிர்க்கவும். நண்பர்களிடமிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் சிந்தனை, திறமையை நிரூபிக்க முடியும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு கை கொடுக்கக்கூடிய நாள். ஆன்மீக செயல்பாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களின் நற்பெயர் அதிகரிக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து பண வருவாய் பெறுவீர்கள். உங்களின் இலக்குகளை அடைய திட்டமிட்டு செயல்படவும். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய எந்த ஒரு வேலையிலும் நல்ல லாபத்தை பெற்றிடலாம். உங்களின் பழைய கடன்களை அடைக்க வாய்ப்பு கிடைக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் உடல் ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. பணியிடத்தில் உங்கள் வேலைகளில் கண்ணன் கருத்துமாக செயல்படவும். எந்த ஒரு ஆபத்தான வேலையிலும் ஈடுபட வேண்டாம். உங்களின் திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். எந்த ஒரு செயலிலும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவை பெறுவீர்கள்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலமையான பலன் கிடைக்க கூடிய நாள். உங்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் உணவு விஷயத்தில் அக்கறை தேவை. இன்று வயிறு தொடர்பான பிரச்சனைகள் தொந்தரவு தரும். வேலை விஷயத்தில் சிறப்பாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள். குழந்தைகளின் செயல்பாடு மகிழ்ச்சியையும், மரியாதையையும் பெற்றுத்தரும். கடந்த கால தவறுகளில் இருந்து பாடத்தை கற்றுக்கொள்வீர்கள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரிகளுக்கு மிக சிறந்த நாள். உங்களின் கடின உழைப்பிற்கான பலனை பெற்றிடுவீர்கள். பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வேலை சற்று கவலையை ஏற்படுத்தும்.. இன்று யாருக்கும் கடன் கொடுப்பது அல்லது கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு முக்கியமான நாளாக அமையும்.. பணம் தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்கவும். நிலையில் சிக்கலை சந்திக்க நேரிடும். ஆணவத்தை தவிர்ப்பதும், பெரியவர்களுக்கு மதிப்பு கொடுத்த நடப்பதும் அவசியம். இன்று உங்களின் கலைத்திறன் மேம்படும். விளையாட்டு போட்டி, தேர்வு மாணவர்கள் தங்களின் கடின உழைப்பிற்கான சிறப்பான வெற்றியை பெற்றிடலாம்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாள். குடும்ப உறுப்பினர்களுடன் எனக்குமான சூழ்நிலை இருக்கும். குடும்பத்தின் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் முழு கவனம் செலுத்துவீர்கள். உங்களின் எந்த ஒரு வேலையும் செய்து முடிப்பதில் ஆர்வம் மற்றும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். உங்களின் கோபம் மற்றும் ஆணவத்தைத் தவிர்ப்பது அவசியம். அவசரமாக எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று சமூக பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உறவினர்களிடம் இருந்து சிலர் நல்ல செய்திகள் தேடி வரும். வாழ்க்கை துணையுடன் உறவு மேம்படும். உங்களின் முயற்சிகளுக்கு அவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து கவலை ஏற்படும். முக்கியமான விஷயங்களை செய்து முடிக்க திட்டமிடவும். உங்களின் ரகசியங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.