D
மழை என்பது இயற்கையானதாக இருந்தாலும் இந்நாட்டில் வெள்ள அபாயம் இயற்கையானதல்ல என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி குருநாகலில் (Kurunegala) நடாத்திய கட்சியின் இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான இயற்கை அனர்த்தங்கள் நீண்டகால தவறான அபிவிருத்தி நடவடிக்கைகளின் விளைவுகளே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று உலகில் அதிக மழை பெய்யும் பகுதிகள் மற்றும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை வைத்து தொழில்நுட்பம் இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், அந்த தொழில்நுட்பத்தை ஒரு நாடாக நாம் சரியாக பயன்படுத்த தவறிவிட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.