D
அதிபர் ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) நாட்டை இன்னும் பன்னிரெண்டு வருடங்களுக்கு ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன(vajira abeywardena) தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க இன்னும் பன்னிரெண்டு வருடங்கள் நாட்டை ஆட்சி செய்தால், ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாக இலங்கை(sri lanka) மாறும் என்றும், அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்கவின் அறிவுக்கும் முதிர்ச்சிக்கும் அருகில் வரக்கூடியவர் எவருமில்லை எனத் தெரிவித்த அவர், ஒரு நாட்டை ஆள தலைவன் ஒருவன் தேவை என்றும், அதுவே ரணில் விக்ரமசிங்க என்றும் மேலும் குறிப்பிட்டார்.