D
சுவிட்சர்லாந்து (Switzerland) நாட்டு பிரஜையொருவர் அந்நாட்டில் நடாத்தப்படும் தமிழ் பரீட்சையில் சித்திப்பெற்று பலரையும் திரும்பி பார்க்கச் செய்துள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டில் பொருளியல் வணிகத்துறையில் முதுகலைமானி நிலையினை நிறைவு செய்துள்ள உறோயர், பேர்ண் வள்ளுவன் பாடசாலையில் தமிழ் கற்று வருகின்றார்.
வளர்நிலை ஒன்றில் (ஆண்டு ஒன்றில்) கற்கும் இவரை சுவிட்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும்படி பாடசாலை அதிபர் பூநகரியான் பொன்னம்பலம் முருகவேள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி விரும்பி விண்ணப்பித்து பரீட்சையில் தோற்றி நூறு புள்ளிக்கு நிகரான ஆறு புள்ளி பெற்றுள்ளார்.
அத்தோடு, இவர் எழுத்து, பேசுதல், கேட்டுவிளங்குதல் மற்றும் வாசிப்பு நிலைகளிலும் மிகச்சிறப்பான தகமை பெற்றுள்ளதோடு புலம்பெயர்ந்த நாடுகளில் பிற இனத்தாருக்கும் தமிழ்கற்பித்த தமிழ்ப்பள்ளி என்ற பெருமைக்குரிய பள்ளியாக சுவிட்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பள்ளி திகழ்கின்றது.
மேலும், இதற்கு முன்னரும் நான்கு பிற இனச்சிறார்கள் கற்றுச் சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.