Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

மாமனாரை வெட்டிக் கொன்ற மருமகன்

0 1

பழைய தகராறு காரணமாக தனது மாமனாரை மருமகன் வாளால் வெட்டி கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் புத்தளம் மாதம்பை, செம்புகட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

நரசிம்ம கேசர பண்டாரநாயக்க சாம்சன் ஜயவீர (வயது 56) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார்.

இறந்தவரின் வீட்டிற்கு அருகில் வசித்து வரும் சகோதரியின் மகனே இந்த கொலையை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பழைய தகராறு காரணமாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மாதம்பை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.