Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம்

0 2

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது மற்றும் முற்றாக பாதிப்படைந்த வீடுகளை மீள நிர்மாணிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இது தொடர்பான யோசனையை நேற்று (03) அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

இதனடிப்படையில், எந்தவொரு சுற்றறிக்கையையும் நம்பாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பணத்தின் அளவை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டது.

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உலக சுற்றாடல் தின கொண்டாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டை பயன்படுத்துமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், நாளைய தினம் நடைபெறவுள்ள உலக சுற்றாடல் தினத்திற்கான தேசிய கொண்டாட்டத்தை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர (Janaka Wakkumbura) மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.