D
கனடாவில் (Canada) இருந்து இந்தியாவிற்கு (India) நேரடி விமான சேவைகளை தொடங்கவுள்ளதாக கனேடிய விமான சேவை நிறுவனம் எயார் கனடா அறிவித்துள்ளது.
குறித்த விமான சேவை ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, கனேடிய நகரமான ரொறன்ரோவிற்கும் இந்திய நகரம் மும்பைக்கும் இடையில் இந்த விமான சேவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன்போது, ரொறன்ரோவிற்கும் மும்பைக்கும் இடையில் வாராந்தம் 4 விமான சேவைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கனேடிய நகரம் மொன்றியாலில் இருந்து டெல்லி நோக்கிய விமான சேவைகளும் அதிகரிப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் இந்த விமான சேவை நாள்தோறும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்த நிலையில், எயார் கனடா விமான சேவை நிறுவனம் வாராந்தம் இந்தியாவிற்கு 25 விமான சேவைகளை முன்னெடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.