Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

நாடு முழுவதும் 250 புதிய பாலங்கள்: ரணில்

0 1

நாடு முழுவதும் 250 புதிய பாலங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

2014 தொடக்கம் 2024ஆம் ஆண்டு காலப்பகுதியில் நெதர்லாந்து ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தினால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் 750 கிராமிய பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்து நிறைவு செய்ததனை முன்னிட்டு கொழும்பில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, நேற்று (03) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரணில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்தப் பாலங்கள் ஊடாக இணைக்கப்பட்டுள்ள பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அதிபர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் போது குறைந்த வருமானம் பெறும் மக்களும் அதன் மூலம் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கிராமப்புறங்களில் உள்ள மக்கள் மீது அதிக கவனம் செலுத்துவதன் மூலம் வறுமையை பத்து வீதம் வரை குறைக்க வேண்டும் என்பதே அரசின் எதிர்பார்ப்பு எனவும், இந்தத் திட்டத்திற்கு பங்களித்த நெதர்லாந்து அரசாங்கத்திற்கும் ரணில் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.